பொங்கல் விழா - 2025
மண்முனை மேற்கு பிரதேச செயலகமும் சமுக அமைப்புகளும் இணைந்து ஏற்பாடு செய்த பொங்கல் விழா நிகழ்வானது 14.02.2025 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் காஞ்சிரங்குடா கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள ஐயர்குளம் ஶ்ரீ மாணிக்க நாகதம்பிரான் ஆலய வளாகத்தில் வயல் அறுவடை பொங்கல் வைத்தல் என பாரம்பரிய நிகழ்வுகளுடன் சிறப்பாக இடம்பெற்றது.




இந் நிகழ்வில் காஞ்சிரங்குடா காமாட்சி பாடசாலை மற்றும் கலை மன்றங்கள் இணைந்து நடன நிகழ்வுகள், கிராமிய நடனம் பல கலை நிகழ்வுகள் இடம் பெற்றன.


இதில் அதிதிகள் கிராம மட்ட சமுக அமைப்புகள் , பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் ஏனைய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது .















