காணிச்சட்டம் மற்றும் நில அளவை தொடர்பான பயிற்சி நெறி 2025 செப்டம்பர் 24ஆம் திகதி, மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அவர்களின் ஒழுங்கமைப்பின் கீழ், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.


இந்த பயிற்சியில் ஓய்வுபெற்ற உதவிக் காணி ஆணையாளர் திரு க. குருநாதன் மற்றும் சிரேஸ்ட நில அளவை அத்தியட்சகர் திரு K. தட்சணாமூர்த்தி வளவாளர்களாக பங்கேற்றனர்.

கிராம உத்தியோகத்தர்கள், காணி கிளை உத்தியோகத்தர்கள் மற்றும் கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.

பயிற்சியில் முக்கியமாக கீழ்க்கண்ட விடயங்கள் விளக்கப்பட்டது:
-
2008/4 சுற்றுநிருபம்
-
அறிக்கைகள் தயாரிக்கும் முறை
-
நீண்ட மற்றும் குறுங்கால குத்தகைகள்
-
திணைக்களங்களுக்கு காணி கையளித்தல் மற்றும் பாராதீனப்படுத்தல்
-
காணி அளிப்புகள்
-
சட்ட மாற்றங்கள் தொடர்பான விளக்கம்
-
தற்போதுள்ள காணி ஆவணங்கள் குறித்த தெளிவுபடுத்தல்














