எமது மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் தேசிய சிறுவர் தினத்தை முன்னிட்டு ஒரு வார கால விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஏற்பாட்டில் பாடசாலை  மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறியானது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி. நமசிவாயம் சத்தியானந்தி அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய  கணக்காளர் திரு. S சுந்தரலிங்கம் அவர்களின் தலைமையில் 25.09.2025 பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

          FB IMG 1758860947262  FB IMG 1758860949406    FB IMG 1758860951635

இப் பயிற்சி நெறியில் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் திரு. M கோமளேஸ்வரன், வளவாளராக கலாநிதி. ப. தினேஸ், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர், போதைப்பொருள் முற்தடுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர், தேசிய ஒருமைப்பாடு அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் எமது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

          FB IMG 1758860956391  FB IMG 1758860959173 FB IMG 1758860960717 

Scroll To Top