மண்முனை மேற்கு பிரதேச செயலக வாணி விழாவானது 01.10.2025, பிரதேச செயலாளர் திருமதி. நமசிவாயம் சத்தியானந்தி அவர்களின் தலைமையில் உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் மற்றும்  பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

FB IMG 1759375653626 FB IMG 1759375656254 FB IMG 1759375658135 FB IMG 1759375661701

இந்நிகழ்வில் பஜனை நிகழ்வு இடம்பெற்று பகீரத சர்மா குருக்களால் பூசை நிகழ்வு மேற்கொள்ளப்பட்டதுடன் புலமைப் பரிசில் பரீட்சையில் மாகாண மட்டத்தில் முதலிடத்தைப் பெற்ற செல்வி.பிறைசூடி அபிரிஷா மற்றும் தேசிய ஆக்கத்திறன் போட்டியில் தேசிய மட்டம், மாகாண மட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களும் பாராட்டப்பட்டதுடன் விசேட  தேவையுடைய குழந்தைகள், விசேட தேவையுடைய பெற்றோரின் குழந்தைகள் என மொத்தம் முப்பது குழந்தைகளுக்கு "கலைவாணியின் கல்விக்கான உதவி" என்ற அடிப்படையில் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

FB IMG 1759375663882 FB IMG 1759375666171 FB IMG 1759375669419 FB IMG 1759375671341 FB IMG 1759375673034 FB IMG 1759375674977 FB IMG 1759375677755

Scroll To Top