மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் பாரம்பரிய உணவினை ஊக்குவித்தல் மற்றும் போசணை மேம்படுத்தல் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கானது பிரதேச செயலாளர் திருமதி.நமசிவாயம் சத்தியானந்தி அம்மணி அவர்களின் தலைமையில் சுதேச வைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் 29.10.2025 பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.



இந் நிகழ்வில் நிருவாக உத்தியோகத்தர், Dr.தனுஜா(சமூக நல வைத்தியர்), சுதேச வைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



பாரம்பரிய உணவுகளை ஊக்குவிப்பதன் மூலம் போசனை மட்டம் மேம்படுத்தப்படும் என்பதோடு பல தொற்றா நோய்கள் வராமல் தடுக்கலாம் என பல அறிவார்ந்த விடயங்கள் இவ்விழிப்புணர்வு கருத்தரங்கில் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













