விஷ போதைப்பொருட்களை இல்லாதொழிக்கும் " முழு நாடும் ஒன்றாக " எனும் தொனிப்பொருளிலான தேசிய செயற்திட்ட அங்குரார்பணம் செய்யும் நிகழ்வினை முன்னிட்டு எமது மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் 30.10.2025 பிரதேச செயலாளரின் வழிகாட்டுதலுக்கமைய உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.லக்‌ஷனியா பிரசாந்தன்  அவர்களின் தலைமையில் சத்திய பிரமாணம் செய்யும் நிகழ்வு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

FB IMG 1762400845685

FB IMG 1762400848101

FB IMG 1762400850383

FB IMG 1762400852736

இந் நிகழ்வில் கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

FB IMG 1762400855327

FB IMG 1762400858043

FB IMG 1762400860469

FB IMG 1762400862483

இதன் போது தேசிய நிகழ்வு திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டதுடன் விஷ போதைப்பொருள் உற்பத்தி, விநியோகம், விற்பனை, ஊக்குவிப்பு மற்றும் அவற்றிற்கு உடந்தையாக இருத்தலை முற்றுமுழுதாக நிராகரித்தல் மற்றும் எதிர்த்தல் அதனுடன் தொடர்பான நபர்களை கண்டறிந்து தண்டனை பெற்றுக்கொடுத்தல் என போதைப்பொருள் பாவனைக்கு எதிராக உதவிப் பிரதேச செயலாளரின் உரையில் பல கருத்துக்கள் கூறப்பட்டதனை தொடர்ந்து அனைவராலும் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளப்பட்டது.

Scroll To Top