மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் டெங்கு நோய் தடுப்பு முன்னாயத்தம் தொடர்பான கலந்துரையாடலானது பிரதேச செயலாளர் திருமதி.நமசிவாயம் சத்தியானந்தி அம்மணி அவர்களின் தலைமையில் 08.12.2025 பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர், சுகாதார வைத்திய அதிகாரி, சிரேஸ்ர பொதுச் சுகாதார பரிசோதகர், வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஆயித்தியமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இக் கலந்துரையாடலில் நுளம்பு பெருகும் இடங்களை அவதானித்து துப்பரவு செய்தல் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை நடாத்துதல் அத்தோடு குப்பைகளை தரம் பிரித்து பிரதேச சபையிடம் வழங்குதல் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



















