மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் சிறுவர் அபிவிருத்தி, பால்நிலை வலையமைப்பு, உளநல சம்மேளனப் போதைப்பொருள் தடுப்பு குழுக்கூட்டமானது 10.12.2025 பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. FB IMG 1765772709477

FB IMG 1765772711720

இக்கூட்டத்திற்கு   சிரேஸ்ட பொதுச்சுகாதார வைத்திய பரிசோதகர், சிரேஸ்ட தாதி உத்தியோகத்தர்,  மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர், மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

FB IMG 1765772715494

இக்கூட்டத்தில் பாடசாலை இடைவிலகல், மாணவர்களுக்கான பிறப்பு பதிவு பெற்றுக்கொள்ளல், பால்நிலை வன்முறை தொடர்பான விழிப்புணர்வு வழங்கல்,குடும்ப வன்முறை தொடர்பான கலந்துரையாடல், இளவயது திருமணத்தை எவ்வாறு கட்டுப்படுத்தல், போதைப்பொருள் பாவனை நடத்தைக்கு ஆளாகின்ற சிறுவர்கள் தொடர்பான கலந்துரையாடல் மற்றும் சரோஜா வேலைத்திட்டம் தொடர்பான  கலந்துரையாடல் என்பனவும் இடம் பெற்றது.

FB IMG 1765772717432

FB IMG 1765772721872

Scroll To Top