மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான முதல் நாள் அரச சேவை கடமைகளை ஆரம்பிக்கும் சத்தியப்பிரமாண நிகழ்வு, பிரதேச செயலாளர் திருமதி.நமசிவாயம் சத்தியானந்தி அம்மணி அவர்களின் தலைமையில் 01.01.2026 பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது.

புதிய ஆண்டினை வரவேற்று, பிரதேச செயலாளரினால் சம்பிரதாயபூர்வமாக தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து, நாட்டிற்காக உயிர் நீத்தவர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

FB IMG 1767326130484

FB IMG 1767326133100

இதன் பின்னர், நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து உத்தியோகத்தர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து உரையாற்றிய பிரதேச செயலாளர், உத்தியோகத்தர்கள் வினைத்திறன் மிக்க, ஊழல் அற்ற, சிறந்த உற்பத்தித் திறனுடனான சேவையை மக்களுக்கு வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

FB IMG 1767326135990

FB IMG 1767326138246

FB IMG 1767326140454

இந்நிகழ்வில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட பல்வேறு பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் இறுதியில், எமது பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 80 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

FB IMG 1767326145750

FB IMG 1767326149626

FB IMG 1767326154356

FB IMG 1767326157906

FB IMG 1767326165761

FB IMG 1767326169696

FB IMG 1767326175067

FB IMG 1767326183299

Scroll To Top