மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட குறிஞ்சாமுனை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில் 23.01.2026 மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழா பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அம்மணி அவர்களின் தலைமையில், பிரதேச இந்து ஆலயங்கள் மற்றும் அறநெறிப் பாடசாலைகளின் பங்களிப்புடன் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.

FB IMG 1769398504119

FB IMG 1769398508823

FB IMG 1769398518558

FB IMG 1769398525762

நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலகக் கணக்காளர் திரு S சுந்தரலிங்கம், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் திரு M கோமளேஸ்வரன், நிருவாக உத்தியோகத்தர் திருமதி S தவலோஜினி, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இந்து ஆலயங்களின் நிருவாகிகள், பிரதேச பொதுமக்கள், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

FB IMG 1769398536614

FB IMG 1769398550864

FB IMG 1769398556910

விழாவின் முதல் நிகழ்வாக அதிதிகள் மற்றும் கிராம விவசாயிகளால் வேளாண்மை அறுவடை செய்யப்பட்டு, மாட்டு வண்டி, கோலாட்டம், கும்மி போன்ற பாரம்பரிய கலை நிகழ்வுகளுடன் ஊர்வலமாக ஆலய முன்றலுக்கு எடுத்துவரப்பட்டு பின்னர் கம்பால் அடித்து தூற்றி, குற்றி, புடைத்து அரிசியாக்கி பொங்கல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.FB IMG 1769398570406

FB IMG 1769398576725

FB IMG 1769398582546

FB IMG 1769398591423

FB IMG 1769398596623

FB IMG 1769398613611

FB IMG 1769398635719

Scroll To Top