இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 78வது சுதந்திர தின நிகழ்வு 04.02.2026 மண்முனை மேற்கு பிரதேச செயலக வளாகத்தில், பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அம்மணி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பமாக பிரதேச செயலாளரால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாட்டிற்காக உயிர் நீத்த வீரர்களை நினைவுகூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Flag

FB IMG 1770263010273

FB IMG 1770263013992

FB IMG 1770263021166

இதன் பின்னர் பிரதேச செயலாளரின் சுதந்திர தின உரை இடம்பெற்றது. அவ் உரையில் தாய் நாட்டின் வளர்ச்சிக்காகவும் குறிப்பாக எமது பிரதேச மக்களின் வளர்ச்சிக்காக அனைத்து உத்தியோகத்தர்களும் இணைந்து சேவையினை வழங்கி இப்பிரதேசத்தினை வளர்ச்சியடைந்த  பிரதேசமாக மாற்ற உழைக்க வேண்டும் என தனது உரையில் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.FB IMG 1770263025525

FB IMG 1770263029577

FB IMG 1770263044791

தொடர்ந்து 78 வது சுதந்திர தின வாரத்தினை முன்னிட்டு கிளீன் ஶ்ரீலங்கா மற்றும்  முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டதுடன், உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

FB IMG 1770263059351

Scroll To Top