மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவின் ஒத்துழைப்போடு மாபெரும் இரத்ததான முகாம் 16.03.2026 பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.


மனிதாபிமான சேவையை முன்னிறுத்தும் இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர். அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் உயிர்களை காப்பாற்றும் உயர்ந்த மனிதாபிமான செயலில் அனைவரும் ஒன்றிணைந்தது இந்நிகழ்வின் சிறப்பாகும்.
இரத்ததானத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இந்நிகழ்வு சமூகத்தில் ஒற்றுமை, மனிதநேயம் மற்றும் சேவை மனப்பாங்கை மேலும் வலுப்படுத்தும் ஒரு சிறந்த முயற்சியாக அமைந்தது.

















