மண்முனை மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில், மண்முனை மேற்குபிரதேச செயலகம், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி அலுவலகம் மற்றும் மண்முனை மேற்கு பிரதேச சபை அலுவலகங்களுக்கிடையிலான சிநேகபூர்வ ஆண்களுக்கான கிரிக்கெட் மற்றும் பெண்களுக்கான எல்லே விளையாட்டு போட்டி 05.05.2026 நாவற்காடு பாரத் விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

FB IMG 1778124857215

FB IMG 1778124840059

20260507 090726

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அம்மணி அவர்கள் கலந்து சிறப்பிக்க மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர், வலயக்கல்வி பணிப்பாளர், பிரதேச செயலக கணக்காளர், வலயக்கல்வி அலுவலக கணக்காளர் மற்றும் மண்முனை மேற்கு பிரதேச சபை செயலாளர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.20260507 090909

FB IMG 1778124886637

FB IMG 1778124849871

போட்டிகளின் நிறைவில், கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தெரிவான எமது மண்முனை மேற்கு பிரதேச செயலக அணியினர் இரண்டாம் இடத்தினை பெற்றதுடன், பெண்களுக்கான எல்லே சுற்றுப்போட்டியில் எமது அணியினர் முதலாம் இடத்தினை வெற்றிகரமாகப் பெற்றுக்கொண்டனர்.

20260507 090840

20260507 090654

Scroll To Top