பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைப்பு செய்யப்பட்ட ஆயித்தியமலை தெற்கு வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான அலுவலக கட்டிடம் இன்று 14.05.2026 மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.



ஆயித்தியமலை தெற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அலுவலக திறப்பு நிகழ்வைத் தொடர்ந்து மரநடுகை நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது.















