உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, நிலைபேண்தகு உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் மண்புழு உரம் தயாரிக்கும் செயல்முறைப் பயிற்சி 09.06.2026 பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட விவசாயிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.20260610 093016

20260610 093032 1

பயிற்சியின் வளவாளராக பொறியியலாளர் திரு றிலா மர்சூக் அவர்கள் கலந்து கொண்டு, மண்புழு உரம் தயாரிப்பின் முக்கியத்துவம், அதன் பயன்பாடுகள் மற்றும் தயாரிப்பு முறைகள் தொடர்பான செயல்முறை விளக்கங்களை வழங்கினார்.

மேலும், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் முகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பதற்கான உபகரணத் தொகுதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

Scroll To Top