மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் பிரதேச சிறுவர் அபிவிருத்தி, பால்நிலை வலையமைப்பு, உளநல சம்மேளனம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு குழுக்கூட்டம் 26.06.2026 பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சிரேஸ்ட பொதுச்சுகாதார வைத்திய பரிசோதகர், மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்,அரச சார்பற்ற நிறுவன உத்தியோகத்தர்கள்,மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் இணைப்பாளர்,தொழில் உத்தியோகத்தர்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனபலர் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள்
1. பாடசாலை இடைவிலகலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள்.
2. மாணவர்களுக்கான பிறப்புப் பதிவு பெறும் செயல்முறைகளை விரைவுபடுத்துதல்.
3. பால்நிலை வன்முறை தொடர்பான விழிப்புணர்வை வலுப்படுத்துதல்.
4. குடும்ப வன்முறையைத் தடுக்கும் ஆலோசனைகள் மற்றும் ஒருங்கிணைந்த செயற்பாடுகள்
5. இளவயது திருமணங்களைத் தடுப்பதற்கான முன்னெடுப்புகள்.
6. போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகும் சிறுவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள்.
7. சரோஜா வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால செயற்பாடுகள்














