“நேர்மையே நல்லாட்சியின் அடித்தளம்" என்ற உயரிய நோக்கை முன்னிறுத்தி, “நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 27.07.2026 பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அம்மணி அவர்களின் தலைமையில் காலை 9.00 மணிக்கு மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் நேர்மை சத்தியப்பிரமாண நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.


இதனைத் தொடர்ந்து, அலுவலகத்தில் நேர்மை குழு உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதுடன், நேர்மை, வெளிப்படைத் தன்மை, பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அரச சேவையை உறுதிப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாக பிரதேச செயலாளர் அவர்களால் அலுவலக உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு, ஊழலற்ற, பொறுப்புணர்வுமிக்க மற்றும் மக்கள் நம்பிக்கையைப் பேணும் அரச சேவையை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான முன்னெடுப்பாக அமைந்தது.
















