நேர்மைக்_கலாசாரம் – கிளீன்_ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்ச்சித்திட்டம் பிரதேச செயலாள் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அம்மணி அவர்கிளின் வழிகாட்டலில் மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட உன்னிச்சை கிராம உத்தியோகத்தர் பிரிவில் மீனவ சங்கக் கட்டடத்தில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கான "நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு 28.07.2026 வெற்றிகரமாக நடைபெற்றது.
இக்கருத்தரங்கின் மூலம், நேர்மை, பொறுப்புணர்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழலற்ற சேவைக் கலாசாரத்தை சமூகத்தின் அனைத்துத் தரப்பினரிடமும் வலுப்படுத்துவதன் அவசியம் எடுத்துரைக்கப்பட்டதுடன், தூய்மையானதும் பொறுப்புமிக்கதுமான சமூகத்தை உருவாக்குவதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறு கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர், விஞ்ஞான தொழிநுட்ப உத்தியோகத்தர், கிராம மட்ட அமைப்பினர், சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

















