கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அவர்களின் வழிகாட்டலில் , 31.07.2027 மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பன்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் பச்சை கடைக்காரன் குளத்தை அண்டிய பகுதியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் சிரமதானப் பணிகளும் மரநடுகை நிகழ்வும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய பிரிவு, வெளிக்களப் பிரிவு, சமூக சேவைப் பிரிவு உத்தியோகத்தர்கள், கிராம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பன்சேனை பகுதி பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் தமது பங்களிப்பை வழங்கினர்.

மேலும், கிளீன்-ஶ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமும் மண்முனை மேற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

IMG 20260731 WA0006

FB IMG 1785508552601

FB IMG 1785508557362

FB IMG 1785508571650

FB IMG 1785508577933

FB IMG 1785508583344

FB IMG 1785508593818

FB IMG 1785508607028

Scroll To Top