ஆயித்தியமலை புனித சதாசகாய மாதா திருத்தலத்தின் 72வது வருட நிறைவு பாதயாத்திரையை முன்னிட்டு, பாதயாத்திரையில் கலந்துகொள்ளும் பக்த அடியார்களை வரவேற்கும் முகமாக, மாதாவிற்கான வரவேற்பு, சிறப்பு பிரார்த்தனை மற்றும் தாகசாந்தி நிகழ்வு 05.09.2026 அன்று மண்முனை மேற்கு பிரதேச செயலக அலுவலக வளாகத்தில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அம்மணி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, பிரதேச செயலாளர் அவர்கள் புனித சதாசகாய மாதாவை வரவேற்று, மாலை அணிவித்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். தொடர்ந்து பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் மற்றும் கலாசார உத்தியோகத்தர் உள்ளிட்டவர்களும் மாதாவிற்கு மாலை அணிவித்து பிரார்த்தனை செய்தனர்.


அதனைத் தொடர்ந்து, பாதயாத்திரையில் கலந்து கொண்ட பக்த அடியார்களின் களைப்பை போக்கும் வகையில் அலுவலகத்தின் ஏற்பாட்டில் சிற்றுண்டி மற்றும் தேநீர் வழங்கப்பட்டு தாகசாந்தி நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது
















