இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 77வது சுதந்திர தின நிகழ்வானது மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி ந. சத்தியானந்தி அவர்களின் தலைமையில் 04.02.2025 ம் திகதி பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.


இதன்போது பிரதேச செயலாளரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாட்டிற்காக உயிர் நீத்தோரை நினைவு கூர்ந்து ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.


அத்துடன் பிரதேச செயலாளரின் சுதந்திர தின உரை இடம்பெற்றது. இவ் உரையில் 'Clean SriLanka' திட்டம் பற்றியும் சுற்றுச்சூழல் ,பொருளாதாரம் மட்டுமல்லாது ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உற்பத்தி திறன் தொடர்பாகவும் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது . அதனை தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டதுடன் உத்தியோகத்தர்களினால் சிரமதான பணியும் மேற்கொள்ளப்பட்டது.


இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்,கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
















