மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் 18.02.2025 அன்று மகிழ்ச்சியான கிராமம் செயற்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் பிரதிநிதிகளுக்கும், கிராம மட்ட கள பணியாளர்களுக்குமான TOT Program பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம் பெற்றது .


இதில் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் பிரதிநிதிகளுக்கும், கிராம மட்ட கள பணியாளர்களுக்கும் மகிழ்ச்சியான கிராமம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது போன்ற விடயங்கள் பயிற்சியளிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி , சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.















