மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் நடமாடும் சேவை -2025
மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் காணிப்பிரிவு தொடர்பான நடமாடும் சேவை ஆரம்பக்கட்டமாக 20.02.2025 உன்னிச்சை மற்றும் நெடியமடு கிராமப்பிரிவினை ஒருங்கிணைத்து உன்னிச்சை கிராமப்பிரிவில் இடம் பெற்றது, இரண்டாம் கட்டமாக 21.02.2025 பிரதேச செயலாளரின் தலைமையில் ஆயித்தியமலை வடக்கு கிராமப்பிரிவில் ஆயித்திய மலை வடக்கு ,தெற்கு கிராமப்பிரிவை ஒருங்கிணைத்து இடம் பெற்றது .


இதில் அளிப்புக்கள் ,அனுமதிப்பத்திரங்களை அலுவலகத்திற்கு வருகை தந்து பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு அளிப்புகள் அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டன. அதுதொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.


இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.














