மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் காலாண்டு கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம் 28.02.2025 பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் கணக்காளரினால் 2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் முன்னேற்ற அறிக்கைகள் , கணக்காய்வு பற்றிய விடயங்களின் முன்னேற்றங்கள் பற்றிய அறிக்கைகள் மற்றும் கிளை ரீதியான முன்னேற்ற அறிக்கை விளக்க காட்சிகள் மூலம் தெளிவுபடுத்தப் பட்டன.

மேலும் கணக்காய்வு அத்தியட்சகர் மற்றும் பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஆகியோரினால் அலுவலக கடமைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தெளிவுபடுத்தியிருந்தனர்.

இக்கூட்டத்தில் கணக்காய்வு அத்தியட்சகர் ரொபர்ட் அலோசியஸ் அவர்களும் பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எஸ்.சசிகரன் அவர்களும் பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பதவி நிலை உதவியாளர்கள், விடய உத்தியோகத்தர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.














