மண்பாண்ட பயிற்சி நெறி
மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் விதாதா வள நிலையத்தினால் தெரிவு செய்யப்பட்ட 20 பயனாளிகளுக்கு RDPO அனுசரனையில் தேசிய அருங்கலை பேரவையின் வளவாளர்களால் மேற்கொள்ளப்படும் 10 நாள் மண்பாண்ட பயிற்சி நெறியானது 10.03.2025 - 21.03.2025 வரை இடம் பெற்று வருகின்றது.


இவ் மண்பாண்ட பயிற்சி நெறியில் 14.3.2025 பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி அவர்களினால் பார்வையிடப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் அருங்கலை பேரவையில் சங்கமாக பதிவு செய்யப்பட்டவர்களில் முதற்கட்டமாக 4 பேருக்கு அடையாள அட்டையும் வழங்கி வைக்கப்பட்டன.
















