மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் உணவு அல்லாத நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு -2025
மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் அனுசரணையில் Fengal சூறாவளியினால் பாதிக்கப்பட்ட 04 கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த 225 பயனாளிகளிக்கு உணவு அல்லாத நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வானது 08.04.2025 கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது .



இந்நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவை சங்க தவிசாளர் கே.விமலநாதன் அவர்களும் உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.யோகராஜா அவர்களும் , செஞ்சிலுவை சங்க அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.















