கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களமும் மண்முனை மேற்கு பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கிடையிலான எல்லே விளையாட்டு சுற்றுப்போட்டி 2025

மண்முனை மேற்கு பிரதேச செயலக கிராம அபிவிருத்தி பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட இறுதிப்போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்கள் கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் பா.கோகுலராஜன் அவர்களும் கலந்து கொண்டார். அத்துடன் பிரதம நடுவராக மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு.பா.ஜெயகுமார் அவர்களும் கலந்து கொண்டார்.


இச்சுற்றுப்போட்டியில் 26 மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் பங்குபற்றியதுடன் இறுதிப்போட்டியில் பருத்திச்சேனை மற்றும் நெல்லூர் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் போட்டியிட்டு பருத்திச்சேனை மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் வெற்றி கிண்ணத்தை சுவீகரித்தது.














