சர்வதேச சுனாமி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் சுனாமி ஒத்திகை நிகழ்வு மற்றும் பயிற்சி என்பன 05.11.2025 பிரதேச செயலாளர் திருமதி.நமசிவாயம் சத்தியானந்தி அவர்களின் தலைமையில் கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.




இந் நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர், பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர், மட்டக்களப்பு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர், தேசிய அனர்த்த நிவாரண சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர், கன்னன்குடா மகா வித்தியாலய அதிபர், SLRC உத்தியோகத்தர்கள், AU Lanka உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், இராணுவத்தினர் மற்றும் கன்னன்குடா மகா வித்தியாலய ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.




இந்நிகழ்வில் அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என முதலாவது அறிவித்தலின் பின்னர் பாடசாலையில் இருக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக்கிய ஆவணங்களை எடுத்துக்கொண்டு பாதுகாப்பான வழியின் ஊடாக ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பாதுகாப்பான இடத்திற்கு எவ்வாறு வந்து சேர்வது, அவர்களுக்கான உதவிகளை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பது பற்றியும் அனர்த்தம் ஒன்று ஏற்பட்டால் தகவல்களை சேரக்கூடிய வகையில் எவ்வாறு வழங்க வேண்டும் என்பது பற்றியும் பயற்சி மூலம் செயற்படுத்தி விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













