கிழக்கு மாகாண இரண்டாவது ஒருங்கிணைப்பு சாலை முதலீட்டுத் திட்டம் தொடர்பான குறைதீர்க்கும் கலந்துரையாடலானது பிரதேச செயலாளர் திருமதி.நமசிவாயம் சத்தியானந்தி அம்மணி அவர்களின் தலைமையில் 12.01.2026 பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.


இக் கூட்டத்திற்கு மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர், பிரதிதிட்டமிடல் பணிப்பாளர், சூழல் பாதுகாப்பு அதிகாரி, திட்டத்தின் பொறியியலாளர், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பிரஜா சக்தி தலைவர் மற்றும் சமூக மட்ட அமைப்பின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலில் திட்டம் தொடர்பான பொதுமக்களின் குறைகள், ஆலோசனைகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.














