மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான சிறுபோகப் பயிர்ச் செய்கையை முன்னிட்டு ஆரம்பக் கூட்டம் 12.03.2026 நடைபெற்றது. இந்நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி நமசிவாயம் அவர்களின் ஒழுங்கமைப்பில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.J.S.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

FB IMG 1773373509581

FB IMG 1773373506442

FB IMG 1773373512349

இக்கூட்டத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான சிறுபோகப் பயிர்ச் செய்கையில் 14324 ஏக்கர் நெற்செய்பையை வெற்றிகரமாக முன்னெடுக்க தேவையான திட்டங்கள், விவசாயிகளுக்கான வழிகாட்டுதல்கள், நீர்ப்பாசன வசதிகள், உர விநியோகம் மற்றும் விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் பல முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

20260313 091623

20260313 091727

20260313 091800

இந்நிகழ்வில் மத்தி,மாகாண நீர்ப்பாசன, விவசாய மற்றும் தொடர்புடைய திணைக்களங்களின் அதிகாரிகள், வங்கிகளின் பிரதிநிதிகள், கமநல அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.

Scroll To Top