கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் நான்காம் நாள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அம்மணி அவர்களின் வழிகாட்டலில் , 30.07.2026 மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் QR முறை மூலம் பொதுமக்கள் முறைப்பாடுகளை பதிவு செய்யும் நடைமுறை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு வெளிக்கள மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தரால் QR குறியீட்டைப் பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது முறைப்பாடுகளை எளிமையாகவும் விரைவாகவும் பதிவு செய்யும் நடைமுறை தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டம், இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகள்,அதேபோன்று  ஏனைய பொது முறைப்பாடுகள்  என்பனவற்றை QR முறையின் ஊடாக எவ்வாறு பதிவு செய்யலாம் என்பது குறித்தும் விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

பொதுமக்களுக்கு எளிதான, வெளிப்படையான மற்றும் பொறுப்புணர்வுமிக்க சேவையை வழங்கும் நோக்கில் இவ்வாறான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

FB IMG 1785508372841

FB IMG 1785508378151

FB IMG 1785508384406

FB IMG 1785508412839

Scroll To Top