சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு மண்முனை மேற்கு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த யோகா பற்றிய விழிப்புணர்வும் பயிற்சியும் 27.06.2025 கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் ந. சத்தியானந்தி அவர்களின் அனுமதி மற்றும் வழிகாட்டுதலுக்கமைய இடம் பெற்றது.

FB IMG 1751254323804FB IMG 1751254325821

FB IMG 1751254327906FB IMG 1751254330175

இந்நிகழ்வில் பதவி நிலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் ஐஸ்வர்யம் யோகா இன்சிற்ரியூட் பொறுப்பாளர் எஸ் . ஸ்ரீதரன் மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகரும் ஐஸ்வர்யம் யோகா கலை மன்றத்தின் பொறுப்பாளருமான அ. ஜெயகரன் மற்றும் யோகா பயிற்றுவிப்பாளர் மு.கமலேந்திரன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு உத்தியோகத்தர்களுக்கு யோகா பற்றிய விழிப்புணர் வினையும் பயிற்சியினையும் வழங்கி வைத்தனர்.

FB IMG 1751254332364FB IMG 1751254334885

FB IMG 1751254337642FB IMG 1751254340373

இந்த விழாவின் போது, IUYF  International Yoga Federation ஏற்பாட்டில் நடைபெற்ற யோகா போட்டிகளில் வெற்றி பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர் மிதுளா கமலேந்திரன் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர் நிலானி ரமேஷ் ஆகியோருக்கு   வெற்றி பதக்கம் அணிவிக்கப்பட்டு வெற்றிச் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப் பட்டனர்.

FB IMG 1751254349850  FB IMG 1751254352238

 

Scroll To Top